ராஜபக்சவினர் குறித்து முடிவெடுக்க ஒரு பொன்னான வாய்ப்பு – சம்பிக்க
நாட்டின் வங்குரோத்து நிலைக்கு முக்கிய காரணமான ராஜபக்சக்கள் தொடர்பில் மக்கள் தீர்மானம் எடுப்பதற்கும், நாட்டில் உண்மையான மக்களின் பதில் என்னவென்பதை வெளிப்படுத்தவும் பொன்னான சந்தர்ப்பம் இத்தருணத்தில் உருவாகியுள்ளது என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். .
இதனைக் குறிப்பிட்ட ரணவக்க, அண்மைக்காலமாக வீழ்ந்த நாட்டை நிமிர்த்த தற்போதைய நிர்வாகத்தால் முடியுமா..? என்ற தொனிப்பொருளில் ‘The Vanguard – Frontline’ தொழில் வல்லுநர்கள் சங்கம் மகாவலி மையத்தில் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்வில் அழைப்பாளராகப் பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவது குறித்து தாம் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை எனவும் , முறையான மதிப்பீட்டிற்குப் பிறகு, எதிர்காலத்தில் அது குறித்து அறிவிக்கவுள்ளதாக அவர் கூறினார்.
இங்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவை வழங்குவதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக வெளியான வதந்தியில் உண்மை உள்ளதா என ஊடகவியலாளர் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினரிடம் வினவினார்.
அதற்கு பதிலளித்த திரு.ரணவக்க, “மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச நாட்டை வங்குரோத்து செய்தவர்கள் என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. தனிநபர்களாக நாங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறோம். அதில் எந்த பிரச்சனையும் இல்லை. என்று பலதரப்பட்ட மனிதர்கள் நம்மை அவதூறாகப் பேசுகிறார்கள். அவற்றை நாங்கள் கருத்தில் கொள்வதில்லை. ஆனால் இந்த நாட்டை திவாலாக்க காரணமானவர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் மனித உரிமை வழக்கு அல்ல, பொருளாதார குற்றவாளிகளுக்கு எதிராக இந்நாட்டு மக்கள் தரப்பில் சில நடவடிக்கைகள் தேவை என்பதை மிகத் தெளிவாகக் கூற வேண்டும். .” என்றார் அவர்.