யாழ். கடல் நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மூலம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்ற “யாழ்ப்பாணம்-கிளிநொச்சி நீர் வழங்கல் கருத்திட்டத்தின் தாளையடி கடல் நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையம்” இன்றைய தினம் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் (2024.08.02) ஆம் திகதி இன்று வெள்ளிக்கிழமை வைபவ ரீதியாக பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,யாழ்,கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், கடற்றொழில் நீரியல் வளத் துறை அமைச்சருமான கே. என். டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி. எஸ். எம். சாள்ஸ், ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதாணி சாகல ரட்நாயக்க, ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தாகியோ கொனிஷி உள்ளிட்ட வட மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர்,தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர், பொது முகாமையாளர், ஏனைய உத்தியோகஸ்த்தர்கள், சிறப்பு விருந்தினர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

குறிப்பாக யாழ்ப்பாண மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும் குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வாக தாளையடி கடல் நீரை நன்னீராக்கும் ஆலை இத்திட்டமானது 266 மில்லியன் அமெரிக்க டொலர் ரூபாய் நிதி ஓதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இத்திட்டத்தினூடாக 300,000 மக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்குவதும், இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம் நகரில் 80 ஆயிரம் பயணாளர்களுக்கான சுகாதாரத்தை மேம்படுத்துவதும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தேசியமட்டத்திலான சராசரி நீர் வழங்கலின் உள்ளடக்குகையான 48% உடன் ஒப்பிடும் போது யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்பான நீர் வழங்கல் 5% ஆக உள்ளது.

மேற்கூறிய உண்மைகளை கருத்திற் கொண்டு யாழ்ப்பாண மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கடல் நீரினைச் சுத்திகரிக்கும் உப்பு நீக்கும் ஆலை யாழ்ப்பாண மக்களுக்கு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

– Sivakajan

Leave A Reply

Your email address will not be published.