இஸ்ரேலுக்கு எதிராக ஒருங்கிணையும் ஈரானும் வட்டார நாடுகளும்…
ஈரானும் அதன் வட்டாரக் கூட்டணிகளும் இஸ்ரேலுக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கத் திட்டமிடுகின்றன.
அந்தக் கூட்டணிகள் லெபனான், ஈராக், ஏமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவை.
ஈரான் அதிகாரிகளும் துணை ராணுவப் படைகளின் பிரதிநிதிகளும் சந்தித்திருந்தனர்.
அந்தச் சந்திப்பில் ஈரானும் அதன் ஆதரவாளர்களும் ஒரே நேரத்தில் பதிலடி கொடுப்பது அல்லது கூட்டணியில் உள்ள ஒவ்வோர் உறுப்பினரும் கட்டங்கட்டமாக தாக்குதல் நடத்துவது என 2 சாத்தியங்கள் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மத்தியக் கிழக்கு வட்டாரத்தில் பதற்றம் அதிகரிக்கிறது.
போர் மூளாமல் தடுக்க அமெரிக்காவையும் ஐரோப்பிய நாடுகளையும் சேர்ந்த அரசதந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.