உளவுத்துறை அறிக்கையில் 40 லட்சம் பேரின் தீர்ப்பு?
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வில், 40 இலட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.
கடந்த சில நாட்களாக புலனாய்வு அமைப்புகளின் மிக நுட்பமான ஆய்வுகளில் இந்த உண்மைகள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதித் தேர்தலில் அதிகளவான மக்கள் வாக்களிக்கும் வேட்பாளர் கடைசி சில வாரங்களுக்குள் தெரிவு செய்யப்படுவார்கள் எனவும் தெரியவந்துள்ளது.
வேட்பாளர்களின் பிரபல்யம், நாட்டைக் கட்டியெழுப்ப அவர்கள் வைத்திருக்கும் வேலைத்திட்டம், நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் போன்றவற்றை ஆய்வு செய்த பிறகே, இந்தக் குழுவினர் தங்களது வேட்பாளரை தேர்வு செய்யத் தயாராக உள்ளனர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பத்து இலட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் முதல் முறையாக வாக்களிக்கப் போகிறார்கள்.