வவுனியா பொலிஸார் விடுத்துள்ள அவசர வேண்டுகோள்.
சற்று முன் கொரோனா தொடர்பில் வவுனியா பொலிஸார் விடுத்துள்ள அவசர வேண்டுகோள்
நாட்டின் சில பாகங்களில் கோவிட் -19 இன் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வவுனியா பொலிஸார் பொதுமக்களிடம் அவசர வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளனர்.
இலங்கையில் தற்போது கோவிட் -19 தொற்றின் இரண்டாவது அலை பெருக்கெடுத்துள்ளது. இதனால் இலங்கையில் பல மாவட்டங்கள் முடக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டு சுகாதாத்துறையினரின் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன .
வவுனியா மாவட்டத்தில் கோவிட் -19 சுகாதார நடைமுறையினை நாளையதினம் (05.10.2020) தொடக்கம் பொதுமக்கள் , வர்த்தக நிலையங்கள் பின்பற்ற வேண்டுமென வவுனியா பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக பொதுமக்கள் அனைவருக்கும் சமூக இடைவெளி , முகக்கவசம் என்பன கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் இதனை மீறுபவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
மேலும் வவுனியாலுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்திலும் கைகழுவும் வசதிகள் அல்லது தொற்று நீக்கி மருந்து கட்டாயம் வைப்பதுடன் சுகாதார நடைமுறையினையினையும் பின்பற்றுமாறு வவுனியா வர்த்தக சங்கத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.