கிளப் வசந்த கொலையாளிகளது விபரத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்
08.07.2024 அன்று இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணித்து , நால்வர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பில் அத்துரிகிரிய பொலிஸ் நிலையமும் , மேல்மாகாண தெற்கு குற்றப் பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தக் குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் விசாரணை அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களின் 03 புகைப்படங்கள் போலீசாரால் வெளியிடப்பட்டுள்ளன.
சந்தேக நபர்களின் விவரம்-
01. முழுப்பெயர் – தாருகர வருண இந்திக்க டி சில்வா அல்லது சங்க
தேசிய அடையாள அட்டை எண் – 951350753V
02. முழுப்பெயர் – பெட்டி ஹரம்பகே அஜித் ரோஹன அல்லது சண்டி
தேசிய அடையாள அட்டை எண் – 199207801772
முகவரி – இல. 655/A, மகும்புர, அஹுங்கல்ல
03. முழுப்பெயர் – முத்துவடுர தரிது மதுசங்க டி சில்வா அல்லது பகிரவயா
சந்தேகநபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு இலங்கை காவல்துறை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
தொலைபேசி எண்கள் –
1.நிலைய பொறுப்பதிகாரி , குற்றப் பிரிவு மேல் மாகாண தெற்கு 072-4222223
2. நிலைய பொறுப்பதிகாரி , அதுருகிரிய பொலிஸ் நிலையம் 071-8591657