ஜொன்ஸ்டனை மீறி வாரியபொல மொட்டு கட்சியினர் ரணிலுக்கு ஆதரவு.

ஜனாதிபதி ரணில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்திற்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதுடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க வேண்டும் என இன்று கூடிய பொதுஜன பெரமுன தொகுதி வாரியபொல தொகுதிக் குழு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.

இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் பொதுஜன பெரமுனவின் வாரியபொல தொகுதி அமைப்பாளர் என்ற வகையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஆலோசிப்பதற்காக இன்று காலை தொகுதிச் சபைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.

இதில் வாரியபொல உள்ளூராட்சி சபையை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் சபை உறுப்பினர்கள், வாரியபொல கூட்டுறவு சங்க நிர்வாக சபை, பிரதேச அழைப்பாளர்கள், மத தலைவர்கள் உட்பட அனைத்து அரசியல் செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குருநாகல் மாவட்டத் தலைவர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்காத நிலையில் இந்த முடிவு தனித்தன்மை வாய்ந்தது என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.