ஹாரிஸ், டிரம்ப் விவாதம்.. அடுத்த மாதம் ?

அமெரிக்கத் துணையதிபர் கமலா ஹாரிஸுடன் (Kamala Harris) நேரடி விவாதத்தில் கலந்து கொள்ள முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) சம்மதித்திருக்கிறார்.

FoxNews ஒளிவழியில் அடுத்த மாதம் 4 ஆம் தேதி அது ஒளிபரப்பப்படும்.

ஏற்கனவே அதிபர் ஜோ பைடனுக்கும் (Joe Biden) திரு டிரம்ப்புக்கும் இடையே நேரடி விவாதத்தை ஒளியேற்ற ABC ஒளிவழி திட்டமிட்டிருந்தது.

அது குறித்துத் திரு டிரம்ப் அதிருப்தி தெரிவித்திருந்தார்.

திரு பைடன் அதிபர் போட்டியிலிருந்து விலகியதால் ஜனநாயகக் கட்சியின் சார்பில் திருவாட்டி ஹாரிஸ் ABC ஒளிவழி விவாதத்தில் கலந்துகொள்ளச் சம்மதித்திருந்தார்.

திரு பைடன் அதிபர் போட்டியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து அந்த விவாதம் ரத்துச் செய்யப்பட்டதாகத் திரு டிரம்ப் கூறியிருந்தார்.

ஆனால், Fox Newsஇல் இடம்பெறவிருக்கும் புதிய விவாதம் குறித்து திருவாட்டி ஹாரிஸ் இதுவரை எதுவும் சொல்லவில்லை.

Leave A Reply

Your email address will not be published.