பணத்துக்காக மொட்டுக்கு துரோகம் செய்தது யார்? – பிரசன்ன ரணதுங்க
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பவர்களால் பிளவுபடுத்தவில்லை என்றும், கட்சி உறுப்பினர்களைப் பற்றி கவலைப்படாமல் தமது தனிப்பட்ட நலன்களுக்காக நிற்கும் ஒரு சிறு குழுவினரால் பிளவுபட்டுள்ளதாகவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கட்சி உறுப்பினர்களைப் பற்றி கவலைப்படாத இந்த சிலர் பணத்திற்காக கட்சிக்கு துரோகம் செய்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரத்தினபுரி மாவட்ட உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுடன் நேற்று (03) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.