புயலில் உயிர்பிழைத்த இந்தியச் சிறுமியைப் படம்பிடித்த ஆடவருக்கு விருது.
கடும் புயலில் சிக்கி உயிர்பிழைத்த இளம் பெண்ணைப் படம்பிடித்த சுப்பிராதிம் பட்டாச்சார்ஜி (Supratim Bhattacharjee) என்பவர் இவ்வாண்டின் Mangrove நிழற்பட விருது விழாவில் ஒட்டுமொத்த வெற்றியாளராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
அவர் அந்தச் சிறுமியை இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் (West Bengal) சுந்தரவனக் காட்டில் படம் பிடித்ததாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது.
படத்தில் அந்தச் சிறுமி புயலில் சேதமைடைந்த தமது வீட்டிற்கு முன் நிற்பதைக் காணலாம்.
“இக்கட்டான நிலைமையில் சிறுமியின் முகத்தில் வலிமையும் அமைதியும் தெரிந்தன” என்று பட்டாச்சார்ஜி கூறினார்.
Mangrove நிழற்பட விருது விழா இவ்வாண்டு 10ஆவது முறையாய் நடத்தப்பட்டதாக BBC செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
வனவிலங்குகள், கடலோரப் பகுதிகள், சதுப்புநிலக் காடு, கடல் பல்லுயிர்ச் சூழல் ஆகியவற்றிற்கு இடையே இருக்கும் தொடர்பைக் காட்டும் நோக்கத்தில் விருது விழா நடத்தப்படுகிறது.
மேற்கு வங்காளத்தில் உள்ள சுந்தரவனக் காடு உலகின் ஆகப் பெரிய சதுப்புநிலக் காடு.