உக்ரேனுக்குக் கிடைத்த F-16 ரகப் போர் விமானங்கள்.
உக்ரேன் அதன் நட்பு நாடுகளிடம் இருந்து அதன் முதல் F-16 ரகப் போர் விமானங்களைப் பெற்றுள்ளது.
முன்னதாக அத்தகைய உதவியை வழங்க தயங்கிய நட்பு நாடுகள், இப்போது கைகொடுத்ததற்கு உக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) நன்றி தெரிவித்துக்கொண்டார்.
ரஷ்யா படையெடுப்பைச் சமாளிக்க இதுபோன்ற மேலும் பல உதவிகள் தமது நாட்டுக்குத் தேவைப்படுவதாக அவர் சொன்னார்.
உக்ரேனிய ஆகாயப் படை பெரும்பாலும் சோவியத் காலத்துப் போர் விமானங்களைக் கொண்டுள்ளது.
இப்போது இந்த F-16 ரகப் போர் விமானங்களைப் பெற்றுக்கொண்டது, அதன் ஆற்றல்களை வலுப்படுத்துவதற்கான முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
வரும் மாதங்களில் இன்னும் அதிகமான F-16 ரக விமானங்கள் அனுப்பப்படும் என்று நம்பப்படுகிறது.
ஆனால் அந்த விமானங்களைப் பறக்க போதிய பயிற்சி பெற்ற விமானிகள் இல்லை என்பதைத் திரு ஸெலென்ஸ்கி ஒப்புக்கொண்டார்.
நேட்டோ நாடுகள் சுமார் 65 F-16 ரக விமானங்களை உக்ரேனுக்கு வழங்கப்போவதாய்த் தெரிவிக்கப்பட்டது.