ஞானச்சுடரின் 319 ஆவது மலர் வெளியீடும் உதவித் திட்டங்களும்..
யாழ்ப்பாணம், வடமராட்சி, தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் மாதாந்த ஆன்மீக வெளியீடான ஞானச்சுடரின் 319 ஆவது வெளியீடு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் உறுப்பினரும் முன்னாள் அதிபருமான ஆ.சிவநாதன் தலைமையில் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் வெளியீட்டுரையை செல்வி தயாளினி குமாரசாமியும், மதிப்பீட்டுரையை திருமதி சசிலேகா ஜெயராஜனும் ஆற்றினார்கள்.
அதனைத் தொடர்ந்து சிறப்புப் பிரதிகளும் வழங்கப்பட்டன.
இதில் உதவித் திட்டங்களாக, யா/ உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் பாடசாலையின் உதைபந்தாட்டம் மற்றும் கரப்பந்தாட்டம் அணியினருக்கான சீருடைகள், கரப்பந்தாட்டப் பந்துகள் கொள்வனவுக்காக ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா நிதி என்பன பாடசாலை சமூகத்திடம் வழங்கிவைக்கப்பட்டன.
இந்த உதவித் திட்டத்தை ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் வழங்கி வைத்தார்.
நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரமத்தின் தொண்டர்கள், சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் நிர்வாகிகள், உறுப்பினர், பக்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.