வங்கதேசத்தின் போராட்டம் ஆரம்பம்.. நாடாளுமன்றம் கைப்பற்றப்பட்டது.. கிரிக்கெட் கேப்டன் வீடு எரிப்பு..
வங்கதேச பிரதமர் பதவியை ஷிக் ஹசீனா ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறியதை அடுத்து, அந்நாட்டில் வன்முறைச் சூழல் நீடித்து வருகிறது.
ஊரடங்குச் சட்டத்தை பொருட்படுத்தாமல், போராட்டக்காரர்கள் தெருக்களில் சுதந்திரமாகத் திரிந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்நாட்டு நாடாளுமன்றமும் போராட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுடன், டாக்கா விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
முன்னாள் கிரிக்கெட் கேப்டன் மஷ்ரப் பின் மோட்சாவின் வீட்டிற்கு வங்கதேச வீரர் ஒருவர் தீ வைத்துள்ளார்.
இவர் கடந்த பொதுத் தேர்தலில் வங்காளதேச நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
தற்போது, வங்கதேசத்தில் இடைக்கால அரசு நியமிக்கப்படும் வரை ராணுவ ஆட்சி இருக்கும் என வங்கதேச ராணுவ தளபதி அறிவித்துள்ளார்.