ஒன்றரை மாத குழந்தையை அடித்து கொன்ற தாய் கைது
யாழ்ப்பாணம் தெலிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளவெட்டி பிரதேசத்தில் ஒன்றரை மாத குழந்தை உயிரிழந்ததன் காரணமாக குழந்தையின் தாயை 05 ஆம் திகதி கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குழந்தையின் தாய் , குழந்தைக்கு பாலூட்டிய போது சுயநினைவை இழந்ததாக கூறி அளவெட்டி பிராந்திய வைத்தியசாலையில் 04 நாட்கள் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு மாற்ற வைத்தியசாலை ஊழியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எவ்வாறாயினும், தெலிப்பளை வைத்தியசாலையில் குழந்தை உயிரிழந்துள்ளதுடன், குழந்தையின் உடலிலும் தலையிலும் சிறு காயங்கள் மற்றும் தழும்புகள் காணப்பட்டமையினால், பிரேதப் பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த ஒன்றரை மாதக் குழந்தை சசிரூபன் நிக்காஸின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதுடன் பிரேதப் பரிசோதனையில் குழந்தை உள் இரத்தக் கசிவு காரணமாக உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. தலையில் மட்டுமின்றி, குழந்தையின் உடலில் பல இடங்களில் அடிக்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
குழந்தையின் மரணம் தொடர்பான புகாரின் பிரகாரம் நடவடிக்கை எடுத்த தெல்லிப்பளை பொலிஸார், சந்தேகத்தின் பேரில் குழந்தையின் தாயை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.