மொட்டை பணத்துக்கு விற்றதாக குற்றச்சாட்டு!
மொட்டு பணத்திற்காக விற்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை (பொஹொட்டுவ) பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடல் நேற்று (05) இரவு இடம்பெற்றது.
பத்தரமுல்லையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கலந்துரையாடலில் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, காஞ்சன விஜேசேகர, ரமேஷ் பத்திரன, அலி சப்ரி உள்ளிட்ட அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இக்கலந்துரையாடலில் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக மாவட்ட மட்டத்தில் மக்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க,
“இன்றைய கலந்துரையாடல் மாவட்டக் கூட்டங்கள், மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் அமைப்பது, தொகுதிக் கூட்டங்கள், ஜனாதிபதியின் வேட்புமனுத் திட்டம் மற்றும் பிரச்சார நிகழ்ச்சிகள் பற்றியதாக இருந்தது. எங்களிடம் 91 எம்.பி.க்கள் இருந்தனர். இன்னும் சிலர் உள்ளனர். நாளை மறுநாள்பெயர்கள் வெளியிடப்படும் .” என்றார் அவர்.
இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.
“ஜனாதிபதி எம்மைப் பிரிக்கவோ, பிளவுபடுத்தவோ ஒருபோதும் முயற்சிக்கவில்லை என்பதை நான் மிகுந்த பொறுப்புடன் கூறுகின்றேன். நாட்டு மக்களின் அபிப்பிராயத்தின்படி ஒன்றிணைந்து ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்குமாறு கோரியிருந்தார். கட்சியாகச் செயற்படுமாறு அவர் எப்போதும் கூறுகிறார். .ஆட முடியாதவர்களுக்கு பூமி கோணல் போல சாக்குப்போக்கு சொல்பவர்களின் கருத்து, எமது கருத்து அல்ல.இந்த கட்சி மக்களின் வியர்வையால் உருவானது, வாடகைக்கு, குத்தகைக்கு அல்லது பணக்காரர்களுக்கு விற்கவும் உள்ள கட்சியல்ல. …” என்றார் பிரசண்ன.