ஒலிம்பிக் வீரர், வீராங்கனைகளுக்கு 230,000 ஆணுறை, பெண்ணுறைகள் விநியோகம்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 160க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

பல்வேறு நாடுகளிலிருந்து வரும் வீரர், வீராங்கனைகளில் பலர் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நாள்களில் பாலியல் உறவு கொள்வதாக அறியப்படுகிறது. இதனால் வீரர்களின் பாதுகாப்பு கருதி பல ஆண்டுகளாக ஒலிம்பிக் குழு இலவசமாக ஆணுறை, பெண்ணுறைகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில், 2021 தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கொவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக வீரர், வீராங்கனைகள் பாலியல் உறவில் ஈடுபடக்கூடாது என்பதற்காக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. அப்போது வீரர்களுக்கு ஆணுறைகள் வழங்குவதை ஒலிம்பிக் குழு நிறுத்தி வைத்தது.

தற்போது கொவிட்-19 அச்சுறுத்தல் இல்லை என்பதால் வீரர், வீராங்கனைகள் ஒருவரையொருவர் சந்திக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாரிஸ் ஒலிம்பிக்கில் வீரர், வீராங்கனைகளுக்கு 230,000 ஆணுறை, பெண்ணுறைகளை ஒலிம்பிக் குழு வழங்கியுள்ளது. அவற்றில் 200,000 ஆணுறைகளும் 20,000 பெண்ணுறைகளும் 10,000 ‘ஓரல் காண்டம்’களும் அடங்கும்.

வீரர்கள், வீராங்கனைகளுக்கு எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அவர்கள் தங்கள் நாட்டுக்குச் சென்று மற்றவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தான் இவற்றை வழங்கப்படுவதாக ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.