நாமல் வேட்பாளர் :பசில் அமெரிக்காவுக்கு : விரிசலடையும் ராஜபக்ச குடும்பம்.. ….
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ இன்னும் சில தினங்களில் அமெரிக்காவுக்குத் திரும்பத் தயாராகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மை முன்னிறுத்துவதற்கு நாமல் ராஜபக்ஷ எடுத்த தீர்மானத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிய முடிகிறது.
நாமல் ராஜபக்சவை வேட்பாளராக நிறுத்தும் தீர்மானம் எடுக்கப்பட்டதும் , ராஜபக்ச குடும்பத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேரா ஏற்க மறுத்த நிலையில், பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது, அவரும் அதனை நிராகரித்ததையடுத்து, நாமல் ராஜபக்சவின் பெயர் முன்மொழியப்பட்டது.