பங்களாதேஷில் வீதியில் வழக்குகள் விசாரிப்பு : கொன்று பாலத்தில் தொங்கவிட்டு தண்டனை (Video)

பங்களாதேஷில் அராஜகத்தின் மத்தியில், பிரதான வீதியில் உள்ள மேம்பாலத்தில் தொங்கவிட்டுள்ள பலரது சடலங்களைக் காட்டும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

வங்காளதேசம் தற்போது பாராளுமன்றத்தை கலைத்துள்ள போதிலும் , எதிர்க்கட்சிகள் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க முன்வர மறுத்துவிட்டன.

புதிய பாராளுமன்றம் தெரிவு செய்யப்படும் வரை இராணுவம் நாட்டை ஆட்சி செய்கிறது.

எவ்வாறாயினும், இராணுவ ஆட்சியை தாங்கள் ஏற்கவில்லை எனவும், அவர்களால் பரிந்துரைக்கப்படும் பேராசிரியரையே ஆட்சியராக நியமிக்க வேண்டும் எனவும் போராட்டத்தை முன்னெடுத்து வரும் மாணவர் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

பங்களாதேஷ் முழுவதும் வெடித்துள்ள அராஜகங்களுக்கு மத்தியில், நாட்டின் பல பகுதிகளில் சொத்துக் கொள்ளை, கொலைகள் மற்றும் தீ வைப்புச் சம்பவங்கள் பதிவாகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில், மக்கள் பொருட்களை பதுக்கி வைத்திருப்பதையும் பார்க்க முடிகிறது.

Leave A Reply

Your email address will not be published.