பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்தவுள்ள முகமது யூனூஸ்.
பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தை நோபெல் பரிசு பெற்ற சமூகத் தலைவர் முகமது யூனூஸ் (Muhammad Yunus) வழிநடத்தவுள்ளார்.
பிரதமர் பதவியிலிருந்து விலகிய ஷேக் ஹசினா நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார்.
பங்களாதேஷ் அதிபர் முகமது ஷாபுடின் அலுவலகம் இடைக்கால அரசாங்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
போராட்டம் நடத்திவரும் மாணவத் தலைவர்களையும், இராணுவத் தலைவர்களையும் அதிபர் சந்தித்தபின் அந்த முடிவு எடுக்கப்பட்டது.
யூனூஸ் அந்தப் பதவியை ஏற்க வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
தற்போது சிறிய அறுவைச் சிகிச்சைக்காகப் பாரிஸ் சென்றிருக்கும் யூனூஸ் விரைவில் நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.