அநுரவிடம் நாட்டை ஒப்படைக்க மக்கள் காத்திருக்கின்றனர் : விஜித ஹேரத்.
அதல பாதாளத்தில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கான சரியான தொலைநோக்குப் பார்வையும், பணிப்புரையும் கொண்ட தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிடம் நாட்டைக் கையளிக்க மக்கள் தயாராக உள்ளதாக விஜித ஹேரத் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான தனது கட்சியின் வேட்பாளரான NPP தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் பிணைப் பணத்தை வைப்பிலிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் 15ஆம் திகதி தமது கட்சிக்காக வேட்புமனுக்களை சமர்ப்பிக்கத் தயார் எனவும் தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,
“நாகரீகமான ஆட்சியை வழிநடத்தக்கூடிய தலைவரைத் தேர்ந்தெடுக்க நாட்டு மக்கள் பல ஆண்டுகளாகக் காத்திருக்கிறார்கள். இன்னும் 48 நாட்களில் அந்த தலைவரை நியமிக்க வாய்ப்பு உருவாகும். மக்கள் அதற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்” என்றார்