அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கு: மீண்டும் விசாரிக்க உத்தரவு
தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் கீழமை நீதிமன்றமான ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கடந்த 2006 முதல் 2011 வரையிலான் காலகட்டத்தில் அமைச்சர்களாக இருந்த இருவரும் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்ந்ததாக 2012இல் அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்குகளின் விசாரணை முடிவின் அடிப்படையில், இரு அமைச்சர்களையும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பளித்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் விசாரணைக்கு எடுத்திருந்தார்.
இந்த நிலையில், அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அமைச்சர்கள் இருவரும் செப்டம்பர் 11ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.