ஆந்திர பிரதேச மாநிலத்தில் கை, கால் வீக்கத்துடன் புதுவித காய்ச்சல் பரவி வருவதால் அச்சத்தில் மக்கள்

ஆந்திர பிரதேச மாநிலத்தில் கை, கால் வீக்கத்துடன் புதுவித காய்ச்சல் பரவி வருவதால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

இந்திய மாநிலமான ஆந்திர பிரதேசம், குண்டூர் மாவட்டத்தில் புதுவித வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. கை, கால்கள் வீக்கம் அடைந்து மூட்டு வலி ஏற்பட்டு நடக்க முடியாமல் காய்ச்சல் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த காய்ச்சல், சிக்கன் குனியாவை போல இருக்கிறது என்று மக்கள் தெரிவித்துள்ளனர். இதனை பரிசோதித்த மருத்துவர்கள், ஆர்போ வகையை சேர்ந்த வைரஸ் தான் இந்த காய்ச்சலுக்கு காரணம் என்று கூறியுள்ளனர்.

குண்டூர் மாவட்டத்தில் மச்சர்லா மற்றும் பல்நாடு ஆகிய பகுதிகளில் இந்த காய்ச்சல் பரவி வருகிறது. வீட்டில் ஒருவருக்கு இந்த வைரஸ் காய்ச்சல் வந்தாலும் மற்றவர்களுக்கு பரவி வருவதால் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

இதில் பெரும்பாலானோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 நாட்களில் காய்ச்சல் குறைந்தாலும் மூட்டு வலி, வீக்கம் குறையவில்லை.

இதில், 2 வாரங்களுக்கு மேல் மூட்டு வலி இருந்தால் ஸ்டீராய்டு மருந்தை கொடுத்தால் நிவாரணம் பெற முடியும் என்று நுரையீரல் நிபுணர் சீனிவாச ராவ் தெரிவித்துள்ளார்.

மேலும், நோயாளிகளிடம் இருந்து ரத்த மாதிரிகள் பெறப்பட்டு புனேயில் உள்ள தேசிய வைரலாஜி ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.