வவுனியா ITஆசிரியர் ஒருவரின் சடலம் பாழடைந்த கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டது!
வவுனியா முஸ்லிம் கல்லூரியின் இளம் ஆசிரியர் ஒருவரின் சடலம் இன்று (07) வவுனியா பொலிஸ் உத்தியோகத்தர்களால் நெலுக்குளம் பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலையில் தகவல் தொழிநுட்ப பாடத்தை கற்பித்த எஸ்.கிருஷான் என்ற 27 வயதுடைய இளம் ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த ஆசிரியர் வவுனியா வேப்பங்குளம் அறுபது ஏக்கர் பகுதியைச் சேர்ந்தவராவார்.
அவரது சைக்கிள், ஒரு ஜோடி காலணிகள் மற்றும் ஒரு குடை ஆகியவை கிணற்றின் அருகே போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டன.
இது தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
மரணம் தொடர்பான பிரேத பரிசோதனைக்காக சடலத்தை வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.