‘நாமலுக்கு பைத்தியம்’ என சொன்ன மஹிந்த.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்சவை நியமிப்பது கட்சிக்கோ அல்லது கீழ்மட்ட மக்களுக்கோ நன்மை பயக்கவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
2015ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவின் தோல்விக்கும் 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட மோதலுக்கும் நாமல் ராஜபக்சவே காரணம் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மகிந்த ராஜபக்சவை விட அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த நாமல் ராஜபக்ச மீது மக்கள் கோபமாக இருப்பதாகவும் அமைச்சர் கூறுகிறார்.
சஜித் பிரேமதாசவுடன் பொதுஜன பெரமுனவின் குழு ஒன்று செய்துகொண்ட ஒப்பந்தமாகவே இதனைப் பார்க்கிறேன் என்றார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மஹிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்த போது ‘நாமல் பைத்தியக்காரன்’ என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.