நாமலால் தலையை பிய்த்துக் கொள்ளும் பவித்ரா.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் பலருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அமைச்சரவை மற்றும் இராஜாங்க ஐஅமைச்சர்களான பவித்ரா வன்னியாராச்சி, தேனுக விதானகமகே, இந்திக அனுருத்த ஆகியோர் தொடர்ந்தும் தமது அமைச்சுப் பதவியை தொடர்வதா அல்லது நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சியில் அமர்வதா என்ற நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.
பவித்ரா வன்னியாராச்சி மற்றும் தேனுக விதானகமகே ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதிகள் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் உள்ளன.