ஜனநாயகக் கட்சியின் துணையதிபர் வேட்பாளராக மினசோட்டாவின் டிம் வால்ஸைத் தேர்ந்தெடுத்தார் கமலா ஹாரிஸ்

ஜனநாயகக் கட்சியின் அதிபர் தேர்தல் வேட்பாளர் கமலா ஹாரிஸ் (Kamala Harris) மினசோட்டா (Minnesota) மாநிலத்தின் ஆளுநர் டிம் வால்ஸைத் (Tim Walz) துணையதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுத்துள்ளார்.

CNN நிறுவனம் அந்தத் தகவலை வெளியிட்டது.

அதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை (7 ஆகஸ்ட்) காலை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரசார அதிகாரிகள் மேல் விவரம் தர மறுத்துவிட்டனர்.

60 வயது திரு வால்ஸ் முன்பு அமெரிக்க ராணுவத்தில் காவல் அதிகாரியாகப் பணிபுரிந்தவர். அவர் முன்னாள் ஆசிரியரும்கூட.

அமெரிக்க மக்களவையில் 2006ஆம் ஆண்டிலிருந்து 12 ஆண்டு சேவையாற்றிய பிறகு 2018இல் மினசோட்டாவின் ஆளுநராகத் திரு வால்ஸ் நியமிக்கப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.