‘எனக்கு எவரும் போட்டி இல்லை: நான் நாட்டுக்காக வருகிறேன்’ – ஜனாதிபதி (Video)

“என்னைப் பொறுத்தவரை இந்த ஜனாதிபதித் தேர்தல் ஒரு போர் அல்ல. நான் யாரிடமும் சண்டையிட வரவில்லை. நான் எனது கொள்கைகளுடன் வருகிறேன்” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

உண்மையைச் சொல்லி நாட்டைக் காப்பாற்றத் தயாரா அல்லது பொய்யைக் கூறி நாட்டைக் குழப்பத் தயாரா என்பதைச் சிந்திக்க வேண்டும். நீங்கள் விரும்பினால் எனக்கு வாக்களியுங்கள்.”

“நான் இதை முன்னெடுத்துச் செல்கிறேன். நான் மற்றவர்களைப் போல வாக்குறுதிகளை அளிப்பதில்லை. செய்து காட்டியுள்ளேன். மற்றவர்கள் வாக்குறுதிகளை வழங்குவதாகவும் ஜனாதிபதி கூறினார்.

மற்ற வேட்பாளர்கள் எனக்கு சவாலாக இல்லை. நாட்டின் எதிர்காலத்திற்காக வருகிறேன். ஏனைய விருப்பமுள்ளவர்களும் தமது எதிர்காலத்திற்காக வரவுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஊடக பிரதானிகளுடன் இன்று (7) இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

சிலர் ஊழலைப் பற்றி மாத்திரம் பேசலாம் ஆனால் ஊழலைத் தடுப்பதற்காக பல சட்டங்களை இயற்றியுள்ளதாகவும், குற்றச் செயல்களால் ஆதாயமான சொத்து தொடர்பான சட்டமூலம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட எவரையும் தாம் ஒருபோதும் பாதுகாக்கவில்லை எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.