முகமது யூனுஸ் மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக பெயரிடப்பட்ட முகமது யூனுஸ் மீது தொடரப்பட்ட , தொழிலாளர் சட்ட மீறல் தொடர்பான வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பங்களாதேஷின் இடைக்கால பிரதமர் பதவிக்கு நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுஸ் நேற்று (07) பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
84 வயதான கலாநிதி முஹம்மது யூனுஸ் இடைக்கால பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டாலும், அது அரசியலமைப்பு நெருக்கடியை ஏற்படுத்தும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பங்களாதேஷின் அரசியலமைப்பில் இடைக்கால அரசாங்கத்திற்காக அப்படியான முறையொன்று இல்லை என்பதே இதற்குக் காரணம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை அமைப்பதற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை தேர்ந்ததெடுக்கவே அரசியலமைப்பு வழிவகை செய்கிறது.
பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறியதையடுத்து கடந்த 6ஆம் திகதி அந்நாட்டு நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தார்.
90 நாட்களுக்குள் பொதுத் தேர்தலை நடத்தவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
ஷேக் ஹசீனா கடந்த திங்கட்கிழமை இந்தியாவிற்கு தப்பிச் சென்றார்.