நாமலுக்கு ஆதரவாக மகிந்த, பசில் மட்டுமே : குடும்பத்தின் பலரால் நிகழ்ச்சி புறக்கணிப்பு.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படும் நிகழ்வில் ராஜபக்ஷ குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்ளாதது குறித்து விவாதம் எழுந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தவிர ராஜபக்ஷ குடும்பத்தின் வேறு எந்த உறுப்பினரும் அதில் கலந்து கொள்ளவில்லை.
முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் ஷஷீந்திர ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷவின் சகோதரர்களான யோஷித ராஜபக்ஷ, ரோஹித ராஜபக்ஷ அல்லது அவரது தாயார் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.
அண்மைக் காலத்தில், கட்சியால் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நியமிப்பது தொடர்பாக ராஜபக்ஷ குடும்பத்திற்குள் கடுமையான கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.