வாஸ் குணவர்தன உள்ளிட்ட 6 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது மகன் ரவிந்து குணவர்தன உள்ளிட்ட ஆறு பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் விதித்த மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று (08) உறுதி செய்துள்ளது.
வாஸ் குணவர்தன உள்ளிட்ட பிரதிவாதிகள் தம்மை அந்த தண்டனைகளில் இருந்து விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களை நிராகரித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டு, பம்பலப்பிட்டியில் வசித்த கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் ஷியாம் என்பவரை கடத்திச் சென்று கொலை செய்த குற்றத்திற்காக இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.