நாமலை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தாலும், ரணிலுடன்தான் இணைவேன் : மகிந்த ஆதரவு பவித்ரா!
நாட்டை பாதுகாக்க ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க இரத்தினபுரி மாவட்டத்தின் பெரும்பான்மையான மக்கள் மற்றும் கட்சியினரின் கோரிக்கைக்கு செவிசாய்ப்பதாக நீர்ப்பாசன மற்றும் வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அறிவித்துள்ளார்.
பொஹொட்டுவ ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்சவை அறிவித்ததன் பின்னரே அவர் இந்த அறிவிப்பை வெளியிடுகின்றமை விசேட அம்சமாகும்.
தாம் பொதுஜன பெரமுனவில் தொடர்ந்தாலும் , சுயேச்சை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கே ஆதரவளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.