மகளிர் உரிமை தொகைக்கு வழங்கப்படும் நிதி தொடர்பாக கேள்வி கேட்ட உச்சநீதிமன்றம்

மகளிர் உரிமை தொகைக்கு வழங்கப்படும் நிதி தொடர்பாக உச்சநீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மகாராஷ்டிராவில் பல்வேறு திட்டங்களுக்காக வனப்பகுதியில் உள்ள நிலங்களை அரசு கைப்பற்றி உள்ளது. மேலும் குடியிருப்பு நிலங்களையும் விலைக்கு வாங்கி உள்ளது. இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடு வழங்கப்படவில்லை.

இது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கு, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது.

அப்பொழுது அரசை கடுமையாக சாடிய நீதிபதிகள், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய சொல்லியும், தாக்கல் செய்யப்படவில்லை. இழப்பீடும் வழங்கப்படவில்லை. லாட்லி பெஹ்னா, லட்கா பாவ் போன்ற திட்டங்களின் கீழ் இலவசங்களை வழங்க மகாராஷ்டிரா அரசிடம் நிதி உள்ளது. மகளிருக்கு மாதம் பணம் வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டங்களுக்கு பணம் உள்ளது. ஆனால் நில இழப்பீடு வழங்க பணம் இல்லையா என கேள்வி எழுப்பினர்.

மேலும், இந்த நிலங்களுக்கான இழப்பீட்டை உடனே வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை நிறைவேற்ற தவறினால், தலைமைச் செயலர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என என ஆகஸ்ட் 13 ம் தேதி வரை மகாராஷ்டிரா அரசுக்கு அவகாசம் அளித்தது.

தமிழ்நாட்டின் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முன்னோடியாக கொண்டு, மஹாராஷ்டிராவில் முக்யமந்திரி மஜி லட்கி பஹின் யோஜனா என்ற திட்டத்தின் கீழ், குடும்ப வருமானம் ஆண்டுக்கு 2.5 லட்சத்துக்கும் குறைவாக உள்ள 21 முதல் 65 வயதுக்குட்பட்ட பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாதம் 1,500 ருபாய் அனுப்பப்பட்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.