சீதுவ போலீஸ் துப்பாக்கி சூடு கதையில் போலீசார் மீது சந்தேகம்!
நேற்று (08) நள்ளிரவு சீதுவ கொட்டுகொட பொலிஸ் வீதித்தடையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபர் தொடர்பில் பொலிஸார் தெரிவித்த கருத்து சந்தேகத்துக்குரியதாக உள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுட்டுக் கொல்லப்பட்ட 38 வயதுடைய நபர் வாகனங்களை வாங்கி விற்பனை செய்யும் வர்த்தகர் எனவும், சாதாரண வாழ்க்கையில் மிகவும் அப்பாவியாக இருந்தாலும், குடிபோதையில் வன்முறையில் ஈடுபடுபவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தின் போது உயிரிழந்த நபருடன் மேலும் மூவர் வாகனத்தில் பயணித்துள்ளதுடன், இறந்த நபரும் மற்றுமொரு நபரும் மட்டுமே மதுபோதையில் இருந்துள்ளனர்.
ஜாஎலயில் இருந்து பூகொட நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தபோது, தண்டுகம பாலத்திற்கு அருகில் தவறான திருப்பத்தை எடுத்து , அதன் பின்னர் சீதுவ சந்திக்கு வந்து கொட்டுகுடா ஊடாக கம்பஹா சென்ற குழுவினர் இந்த பொலிஸ் வீதித்தடையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
போதையில் இருந்த நபர் துப்பாக்கியை பறிக்க முயுன்றாரா அல்லது பொலிஸாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் 3 பேர், அவர்களில் இருவர் மது அருந்தாத சுயநினைவோடு இருந்தவர்கள், எனவே அவர்கள் கொடுக்கும் சாட்சியத்தின் அடிப்படையில் விசாரணையின் முடிவு இருக்கும் என புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது!
முன்னைய செய்தி: