ஒப்பந்தம் முறிந்தால் மீண்டும் எங்கள் ஆதரவு இனி இல்லை.- இலங்கைக்கு IMF தெரிவிப்பு.
பதினெட்டாவது தடவையாக அமுல்படுத்தப்படும் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் முறிவடைந்தால், மீண்டும் அமுல்படுத்தப்பட மாட்டாது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நிதியத்தின் பிரதிநிதிகள் தமக்கு அறிவித்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“ஐ.எம்.எஃப் மற்றும் அரசாங்கத்திற்கு இடையேயான ஒப்பந்தத்தின் காரணமாக நாங்கள் இப்போது மீண்டு வருகிறோம். அந்த ஒப்பந்தம் கைவிடப்பட்டால், அது மீண்டும் கியு சகாப்தத்திற்குச் செல்லும். நாங்கள் 17 முறை IMF ஒப்பந்தங்களை உடைத்தோம். 18-வது முறையாக மீறினால், மீண்டும் அமல்படுத்த மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்கள் என்றார் அவர்.