தேர்தல் நடக்கும்போது நாடு திரும்புவார் ஷேக் ஹசினா.

பங்களாதேஷில் தேர்தல் நடைபெறும்போது முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா நாடு திரும்புவார் என்று அவரது மகன் தெரிவித்துள்ளார்.

எனினும் 76 வயது திருவாட்டி ஹசினா தேர்தலில் போட்டியிடுவாரா என்பது தெரியவில்லை.

திருவாட்டி ஹசினாவின் மகன் சஜீப் வாஸிட் ஜோய்(Sajeeb Wazed Joy) Times of India Dailyஇடம் பேசியபோது அந்த விவரங்களைத் தந்தார்.

“இப்போதைக்கு அவர் (திருவாட்டி ஹசினா) இந்தியாவில் இருப்பார். பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கம் தேர்தலை நடத்த முடிவெடுத்தால் அவர் அங்குச் செல்வார்” என்றார் ஜோய்.

தவணைக் காலம் முடிந்ததும் தமது அம்மா அரசியலில் இருந்து ஓய்வுபெற்றிருப்பார் என்று அமெரிக்காவில் இருக்கும் ஜோய் சொன்னார்.

“அரசியலில் எனக்கு அவ்வளவாக நாட்டம் இல்லை அதனால் அமெரிக்காவில் இருக்கிறேன். ஆனால் பங்களாதேஷின் அண்மைய நிலவரத்தைப் பார்த்தால் அங்குத் தலைமைத்துவ மாற்றம் தேவைப்படுவதுபோல் தெரிகிறது. கட்சி நலனுக்காக அரசியலில் நான் தீவிரம் காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று ஜோய் கூறியிருக்கிறார்.

பங்களாதேஷில் அண்மையில் நடத்தப்பட்ட போராட்டம் கலவரமாக மாறியது. பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு திருவாட்டி ஹசினாவுக்கு நெருக்கடி அதிகரித்தது. இதையடுத்து அவர் பதவியில் இருந்து விலகி நாட்டை விட்டுத் தப்பியோடினார்.

பங்களாதேஷின் புதிய பிரதமராக நோபெல் பரிசு பெற்ற திரு முகமது யூனூஸ் (Muhammad Yunus) பொறுப்பேற்றுள்ளார்.

திருவாட்டி ஹசினா தற்போது புதுடில்லி வட்டாரத்தில் இருப்பதாகவும் பிரிட்டனில் தஞ்சமடைய எண்ணம் கொண்டிருப்பதாகவும் ஊடகங்கள் கூறுகின்றன.

Leave A Reply

Your email address will not be published.