டோனல்ட் டிரம்ப் – கமலா ஹாரிஸ் , முதல் விவாதம் செப்டம்பர் 10..
அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் களமிறங்கும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸும் (Kamala Harris) அடுத்த மாதம் 10ஆம் தேதி விவாதத்தில் ஈடுபடவுள்ளனர்.
அதிபர் ஜோ பைடன் (Joe Biden) போட்டியிலிருந்து அண்மையில் விலகினார்.
அவருக்குப் பதிலாகக் களமிறங்கும் துணையதிபர் கமலா ஹாரிஸுக்கும் திரு. டிரம்ப்புக்கும் இடையே முதல்முறையாக விவாதம் நடைபெறுகிறது.
ABC ஒளிவழி அதை ஏற்றுநடத்தும்.
திரு டிரம்ப் மேலும் இரண்டு விவாதங்களுக்குத் தேதிகளைப் பரிந்துரைத்தார்.
அடுத்த மாதம் 4ஆம் தேதி, 25ஆம் தேதி ஆகியவற்றிலும் விவாதம் நடத்தலாம் என்று அவர் கூறினார்.
திருவாட்டி ஹாரிஸ் அது பற்றி எதுவும் கூறவில்லை.
Ipsos எனும் அனைத்துலக ஆய்வு நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் திருவாட்டி ஹாரிஸ் முன்னணியில் இருக்கிறார்.