ஹரீன், மனுஷ நாடாளுமன்ற பதவி வகிக்க முடியாது – உச்சநீதிமன்றம் உத்தரவு.
அமைச்சரவை அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் சட்டப்பூர்வமானது என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின் மூலம் ஹரின் பெர்னாண்டோ மற்றும் மானுஷ நாணயக்கார ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும்.
இதனால், ஐக்கிய மக்கள் சக்திக்கு மேலும் இரண்டு எம்.பி.க்களை நாடாளுமன்றத்திற்கு நியமிக்க வாய்ப்பு கிடைக்கும்.
கடைசியாக கிடைத்த தகவல்களின்படி , ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.