இப்படி நடக்கும் என தெரிந்தே நான் ஜனாதிபதியுடன் இணைந்தேன் : ஹரின்

அமைச்சர் பதவியை விட்டுக் இழப்பது பெரிய விடயமே இல்லை என சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இன்று தனது அமைச்சின் அதிகாரிகளிடம் உரையாற்றிய அவர், நான்கு அமைச்சுக்களில் தனது கடமைகளை மிகச் சிறப்பாகச் செய்திருப்பதாக நம்புவதாகக் கூறினார்.
நீதிமன்றத்தினால் கிடைத்த உத்தரவை தாம் மதிப்பதாகவும், இவ்வாறு நடக்கலாம் எனத் தெரிந்தே ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க ஒன்றிணைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தன்னை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினாலும் தனது குடியுரிமையில் இருந்து நீக்க முடியாது என தெரிவித்த அவர், எதிர்காலத்திலும் நாட்டுக்காக சேவையாற்றுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.