மகிந்தவின் தொலைபேசி அழைப்புகளால் பலனில்லை.. அமெரிக்கா செல்லும் பசில் .. நாமலின் தேர்தல் பிரச்சாரம் தோல்வி.
நாமல் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நெலும் மாவத்தை கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குமாறு கோரி, நாடு முழுவதிலும் உள்ள உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட தொலைபேசி அழைப்புகள் பலனளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
அவர்களில் பலர் மஹிந்த ராஜபக்ஷவை மதிப்பதாகவும் , ஆனால் நாமல் ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரத்தை ஒழுங்கமைக்க தயாராக இல்லை என்றும் கூறியுள்ளனர்.
இந்நிலைமை காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைக்கு கணிசமான அளவில் தடை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ எதிர்வரும் 15ஆம் திகதி அமெரிக்கா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பசில் ராஜபக்ஷவின் மனைவி ஏற்கனவே அமெரிக்கா சென்றுள்ளார்.
பசில் ராஜபக்ச இலங்கை திரும்பும் தேதி குறித்து தகவல் அறிக்கைகள் எதுவும் இல்லை.