உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் – ஆந்திர அரசு

உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசைப் போலவே ஆந்திர அரசும் அறிவித்துள்ளது.

உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகளில் அரசு மரியாதை அளிக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்து அது நடைமுறையில் உள்ளது. உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில் அம்முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில், சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர மாநில அரசும் இந்த நடைமுறையைக் கையில் எடுத்துள்ளது. அது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஆந்திர அரசு, ‘ஜீவந்தன்’ திட்டத்தின் கீழ் உடல் உறுப்புகளை தானம் செய்ய சம்மதிப்போரின் இறுதிச் சடங்கில் அரசு மரியாதை செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, உடல் உறுப்பு தானம் செய்து இறந்தவர்களின் உடல் மீது மாலை அணிவித்து, அவரது குடும்ப உறுப்பினர்களுக்குச் சால்வை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும், இறுதிச் சடங்கு நடத்துவதற்காக மாநில அரசு சார்பில் குடும்ப உறுப்பினர்களிடம் 10,000 ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.