தேர்தல் கமிஷன் இணையதளம் போன்ற இன்னொரு போலி இணையதளம்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளம் போன்று போலியான இணையத்தளம் ஒன்று தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனகல தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நேற்று (09) நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.