விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள சமஸ்கிருத கல்வெட்டால் தமிழகத்தில் வெடித்த சர்ச்சை!

விமான நிலையத்தின் புதிய முனையத்தில், சமஸ்கிருதத்தில் கல்வெட்டு வைத்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதில், தமிழ், ஆங்கிலம், இந்தி மொழி தவிர சமஸ்கிருதத்திலும் ஒரு கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அலுவல் மொழியாக இல்லாத சமஸ்கிருதத்தில் கல்வெட்டு வைத்திருப்பது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

வழக்கமாக, விமான நிலையங்களில் ஆங்கிலம், இந்தி மற்றும் உள்ளூர் மொழிகளில் பெயர்ப்பலகை வைக்கப்படுவது தான் வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பேசியுள்ள தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சமஸ்கிருத திணிப்பை மத்திய அரசு செய்வது மிகவும் கண்டனத்துக்குரியது எனத் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.