எமது அரசாங்கமும் IMF உடன்படிக்கையை முன்னெடுத்துச் செல்லும் : IMF எமக்கு உதவுகிறது..- அனுர

சர்வதேச நிதியத்துடனான ஒப்பந்தம் எதிர்கால தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழும் தொடரும் என அக்கட்சியின் தலைவர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளார்.

‘தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் நான்கு வருட ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இப்போது இவை அனைத்தும் IMF இன் கீழ் உள்ளன.

கடன் மறுசீரமைப்பும் அப்படித்தான். எனவே, அதிலிருந்து வெளிவர வாய்ப்பு இருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை.

IMF உடன்படிக்கையுடன் நாங்கள் முன்னேறுவோம். இருப்பினும், தொழில் வல்லுநர்கள் மீது விதிக்கப்படும் வரிகளை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இரண்டாவதாக, ஏழைகளுக்கு உணவு, மருந்து, கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார் அவர்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க உதவும் வகையில் ஐஎம்எஃப் எங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.