ரணில் ஜனாதிபதியாகி நாட்டுக்கு செய்தது எதுவும் இல்லை : கியு இல்லாமல் போனது IMF உதவியதால் – முஜிபுர் ரஹ்மான்

ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் நாட்டுக்கு எதுவும் நடக்கவில்லை என SJBயின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
இந்த நாட்டில் வரிசையில் நிற்கும் யுகம் முடிந்துவிட்டதாக ஜனாதிபதி தெரிவித்தாலும், உண்மையில் அது ரணில் விக்கிரமசிங்கவின் திறமையினால் அல்ல, மாறாக சர்வதேச நாணய நிதியம் வழங்கிய கடன் தவணையால்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.