எனக்கு ஆதரவளிக்கும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் அரசியல் எதிர்காலத்தையும் காப்பாற்றுவேன்..- ஜனாதிபதி

தனக்கு ஆதரவளிக்கும் மக்கள் பிரதிநிதிகள் உட்பட அனைவரினதும் அரசியல் எதிர்காலத்தை பாதுகாப்பேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற முன்னாள் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் மன்றத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தை முன்னாள் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் பாராட்டினர்.