ரணிலுடன் இணையும் மொட்டுவினருக்காக புதிய அரசியல் கட்சி : மஹிந்தானந்த

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஒன்றிணைந்த பொதுஜன பெரமுன அணிக்காக அடுத்த வாரத்தில் புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
கண்டி Okre Regency ஹோட்டலில் முன்னாள் உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் மன்றத்தின் பங்குபற்றுதலுடன் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் பின்னர் மொட்டுவுடனான தனது அரசியல் உறவை முறித்துக் கொள்வதாக சூசகமாக தெரிவித்த அவர், புதிய கட்சியை உருவாக்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.