விஜேதாசவை கைவிட்ட மைத்ரி : வேறொரு வேட்பாளருக்கு ஆதரவு…?

ஜனாதிபதித் தேர்தலில் விஜயதாச ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குழுவில் இருந்து முன்னாள் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துருகிரிய பிரதேசத்தில் விஜயதாச ராஜபக்ஷவின் ஜனாதிபதி தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தினால் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் மைத்திரிபால சிறிசேனவின் அணியில் இருந்து எவரும் பங்குபற்றவில்லை.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவளிப்பவர் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தனது அணியினருடன் விசேட கலந்துரையாடலொன்றை நடத்தவுள்ளார்.