ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என மக்களிடம் கேட்க கிராமம் கிராமமாக செல்லும் ரிஷாத்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நாம் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும்? அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் இன்று முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை கிழக்கிலுள்ள முஸ்லிம் கிராமங்களுக்குச் சென்று மக்களின் கருத்தைக் கேட்பதற்கு தீர்மானித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக வெளிநாட்டில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் இன்று காலை இலங்கைக்கு வந்தவுடன் உடனடியாக கிழக்கு நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எதிர்வரும் ஓகஸ்ட் 14ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என அதன் தலைவர் ரிஷாட் பதியுதீன் எம்.பி. தெரிவித்திருந்தார்.
தாம் ஏற்கனவே SJBயின் உறுப்பினர் எனவும், எனவே தான் SJB கூட்டங்களில் கட்சியாக பங்கேற்பதாகவும் குறிப்பிட்டுள்ள எம்.பி.,அந்தக் கூட்டங்களில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு தமது கட்சியின் ஆதரவை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சியின் ஆதரவை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் , எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் வேட்பாளர்கள் தொடர்பில் தமது கட்சி ஏற்கனவே நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளதாகவும் கட்சியின் இறுதித் தீர்மானம் ஆகஸ்ட் 14ஆம் திகதி கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் எடுக்கப்படும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.