வேட்புமனு தினத்தன்று 4,500 போலீஸ் அதிகாரிகள் ட்ரோன்கள், ஸ்னைப்பர்களுடன் பாதுகாப்பு.
ஜனாதிபதி வேட்புமனுத் தாக்கல் தினமான 15ஆம் திகதி வியாழன் அன்று தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் சுற்றுப்புறங்களின் பாதுகாப்பிற்காக ட்ரோன் கேமராக்கள், ஸ்னைப்பர்களுடன் 4,500 க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டவுள்ளனர்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் விரிவான பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் விரிவான பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதன்போது பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க, பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (நிர்வாகம்) லலித் பதிநாயக்க மற்றும் விசேட அதிரடிப் படைத் தளபதி வருண ஜயசுந்தர ஆகியோர் கலந்துகொண்டனர் .
கட்சி ஆதரவாளர்கள் மீது கவனம் செலுத்துவதோடு , கட்டிடம் மற்றும் அருகிலுள்ள பகுதியின் பாதுகாப்புக்கு STF பொறுப்பேற்றுள்ளது.
காலை 9 மணி முதல் 11 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்கப்படும் என்றும், காலை 11 மணி முதல் 11.30 மணி வரை 30 நிமிடங்கள் அவற்றை எதிர்க்க காலம் கொடுக்கப்படும் என்றும், இதுவரை 27 பேர் டெபாசிட் பணம் செலுத்தியுள்ள நிலையில், டெபாசிட் பணம் செலுத்தும் காலம் புதன்கிழமை வரை நீடித்துள்ளமையால் , எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . வேட்பாளருடன் ஒரு சட்டத்தரணி உட்பட இருவர் மாத்திரமே வேட்புமனு மண்டபத்திற்குள் பிரவேசிக்க முடியும் என ரத்நாயக்க தெரிவித்தார்.