வேதனையான லைன் அறை வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜனாதிபதி வாக்குறுதி!
வரலாற்றில் முதல் தடவையாக லைன் அறைகளில் வாழும் மக்களுக்கு கிராமமொன்றில் வாழும் உரிமை வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மலையக தமிழ் மக்களுக்கான சமூக நீதியை பெற்றுத்தருவதே தமது நோக்கம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட வர்த்தகர்களுடனான கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.
நுவரெலியா வர்த்தக சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்பட்டது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை விடுவித்து முன்னோக்கி கொண்டு செல்லும் வேலைத்திட்டத்திற்கு தாம் பூரண ஆதரவளிப்பதாக நுவரெலியா மாவட்ட வர்த்தக சமூகம் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் நுவரெலியா மாவட்ட அறிஞர்கள் மற்றும் தொழில் நிபுணர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நுவரெலியாவில் இடம்பெற்றது.
நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்தை தலைகீழாக மாற்றுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதன்போது நுவரெலியா மாவட்டத்தின் அதிபர்கள் உள்ளிட்ட தொழில் வல்லுனர்களின் பிரச்சினைகளும் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.